ஆசிரியர்களுக்கு இன்று முதல் அமுல்..............!

  ஆசிரியர்களுக்கு இன்று முதல் அமுல்..............! 




ஆசிரியர்களுக்கு இன்று முதல் அமுல்..............!





ஆசிரியர்களுக்கு இன்று முதல் அமுல்..............! 



2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் 21/01/2026 வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 


அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவ்வமைச்சு, 2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின்படி இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் கல்விச் சேவை உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு வழங்கப்பட்டதுடன், அதற்குரிய ஆசிரியர் சம்பளம் இன்றைய தினம் கணக்குகளில் இடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.



வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் வெளிப்படுத்தல்


நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாவை எதிர்பார்த்த போதிலும், இதன் மூலம் இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளது. 


20/01/2026 பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்தார். 


90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன இதன்போது கேள்வி எழுப்பினார். 


அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர், வாகன இறக்குமதியின் போது இறக்குமதியாளர்கள் மீது இந்த மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளமையானது, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்ளும் எதிர்பார்ப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.



 வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு


சுமார் ஒன்றரை நூற்றாண்டு கால வரலாற்றைத் தகர்த்தெறிந்து, ரஷ்யாவை உரைய வைத்திருக்கிறது தற்போதைய கடும் பனிப்பொழிவு. 

 

இந்த ஆண்டு அங்கு வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி   வெளியிட்டுள்ளன.  இதனால் தலைநகர் மொஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

 

குறிப்பாக ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை உயர்ந்துள்ளன. 

 

நான்கு மாடி உயரமுள்ள கட்டிடங்கள் கூட பனிக்குள் புதைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சாரம் இன்றி, போக்குவரத்து முடங்கி, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு அந்தத் தீபகற்பமே தனித்துவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் அங்கு அவசர கால நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நுவரெலியாவில் இன்று பதிவு!


இன்று (21) அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பண்டாரவளை பிரதேசத்தில் இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலையாக 11.5 பாகை செல்சியஸும், பதுளை பிரதேசத்தில் 15.2 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 17.4 பாகை செல்சியஸாகக் காணப்பட்டதுடன், அனுராதபுரம் பிரதேசத்தில் 18.6 பாகை செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.




 இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை  --  மின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை


நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

 
மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தே, தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. 

 
அதன்படி, பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், கூட்டு மின்சார சங்கம், அழைப்பு மைய இயக்குநர்கள் சங்கம் மற்றும் பாதுகாப்பு வலுவூட்டல் மன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. 

 
இலங்கை மின்சார சபையை முற்றாக நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடுவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சாரசபை சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்துள்ளார். 

 
இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை ஒத்திவைக்குமாறு வலுசக்தி அமைச்சரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



PR கனவு இனி எளிது கனடாவின் அதிரடி மாற்றம்


கியூபெக் மாகாணத்திற்கு வெளியே பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், 5,000 கூடுதல் நிரந்தர வதிவிட (PR) இடங்களை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. 

 

ஜனவரி 19, 2026 அன்று மன்க்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் (Lena Metlege Diab) இந்த புதிய ஒதுக்கீடு குறித்த விபரங்களை வெளியிட்டார். 

 

கனடாவின் பன்முகத்தன்மை மற்றும் மொழி வளத்தைப் பேணுவதற்கு இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என அவர் குறிப்பிட்டார். 

 

2025ஆம் ஆண்டில் கனடா நிர்ணயித்த பிராங்கோபோன் (Francophone) குடியேற்ற இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது. 

 

மொத்த நிரந்தர வதிவிடச் சேர்க்கையில் சுமார் 8.9 சதவீதம் பிரெஞ்சு மொழி பேசுபவர்களால் நிரப்பப்பட்டுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான இலக்குகளை கனடா பின்வருமாறு உயர்த்தியுள்ளது. 

 

2026: 9 சதவீதம் 

 

2027: 9.5 சதவீதம் 

 

2028: 10.5 சதவீதம் 

 

2029-க்குள்: 12 சதவீதம் (இலக்கு) 

 

இந்த இலக்குகளை அடைவதற்காக கனடா அரசாங்கம் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

 

எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry): பிரெஞ்சு மொழித் திறன் கொண்டவர்களுக்கென பிரத்யேகப் பிரிவு. 

 

பிராங்கோபோன் மொபிலிட்டி (Francophone Mobility): எளிதான வேலை அனுமதி வழங்கும் திட்டம். 

 

மாணவர் முன்னோடித் திட்டம் (Student Pilot): சிறுபான்மை பிரெஞ்சு சமூகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சிறப்புப் பாதை. 

 

வரவேற்பு சமூகங்கள் (Welcoming Communities): புதிய குடியேறிகளை வரவேற்று ஒருங்கிணைக்கும் உள்ளூர் முயற்சிகள். 

 

கனடாவின் இந்த அறிவிப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

இது பிரெஞ்சு மொழி பேசும் திறமையாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும், நிரந்தரக் குடியுரிமைக்கான எளிய வழிகளையும் உருவாக்கும் என குடிவரவு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

 

பல்வேறு மொழி பேசும் சமூகங்களை ஒன்றிணைப்பதன் மூலம் கனடாவின் பொருளாதார மற்றும் கலாசாரக் கட்டமைப்பை இது மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 மதுபானங்களுக்கு அதிக வரி விதிக்க WHO பரிந்துரை


தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மக்களின் நலனைப் பாதிக்கும் மதுபானம் மற்றும் இனிப்புக் கலந்த பானங்கள் மீது மிக மோசமான வரி விதிப்பு காரணமாக, விலை மலிவாக இருப்பதாக உலக சுகாதார உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

 

வருமானம் உயர்ந்து வரும் சூழலில், இந்தத் தயாரிப்புகளின் விலை அதற்கேற்ப உயர்த்தப்படவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

 

புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இந்தப் பானங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. 

 

வரி குறைவாக இருப்பதால், மக்கள் இவற்றை எளிதாகக் கொள்வனவு செய்து பயன்படுத்துவதே நோய்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

 

மேலும், மதுபானங்களுக்கும் அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது. 

 

குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் அத்தகைய முறை பின்பற்றப்படாதமையால், அதிக போதையுள்ள மதுபானங்களும் குறைந்த விலையில் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. 

 

மேலும் குளிர்பானங்கள் மற்றும் இனிப்புக் கலந்த பழச்சாறுகள் மீதான வரியானது, நுகர்வைக் குறைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.



ஆசிரியர்களுக்கு இன்று முதல் அமுல்..............! 

No comments

Theme images by fpm. Powered by Blogger.