உயர்தரப் பரீட்சை தொடர்பாக.......!

   உயர்தரப் பரீட்சை தொடர்பா.......! 




உயர்தரப் பரீட்சை தொடர்பாக.......!



உயர்தரப் பரீட்சை தொடர்பா.



2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியன இன்று (06) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது



நாட்டில் மழை நிலைமை மேலும் வலுவடையும் 



இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இதன் காரணமாக, ஜனவரி 08 ஆம் திகதி முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். 


ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.



தேங்காய் எண்ணெய்யின் விலை 


கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது


தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார். 


இதனுடன் ஒப்பிடும்போது தாவர எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, சந்தையில் தேங்காய்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் ஒரு தேங்காயின் விலை ரூ. 122 - 124 வரை இருந்த நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு தேங்காயை ரூ. 180 முதல் 200 வரை விற்பனை செய்கின்றமை குறிபிபிடத்தக்கது. 


15ம் திகதி முதல் நாடு முழுவதிலும் அறிமுகமாகும்


வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்களை, ஜனவரி 15 ஆம் திகதி முதல் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இணைய வழியில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Online GovPay முறையின் மூலம் செலுத்த முடியும் என, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலை பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.


இதன் மூலம், வாகன விதிமீறல்களுக்காக அபராதம் விதிக்கப்படும் சாரதிகள் இனி அபராதம் செலுத்துவதற்காக அலுவலகங்களுக்குச் சென்று நேரத்தை விரயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


எந்தவித சிரமங்களும் இன்றி அபராதத் தொகையை இணைய வழியில் செலுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் GovPay மூலம் அபராதம் செலுத்த தேவையான அனைத்து வசதிகளும் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே GovPay வழியாக ரூ. 7.5 மில்லியன் மதிப்பிலான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் உட்பட ஜனவரி 15 முதல் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Online GovPay மூலம் அபராதம் செலுத்தும் முறை அமலுக்கு வருவதால், எதிர்காலத்தில் பொலிஸாருக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டுகள் எழுவதற்கான வாய்ப்பு குறையும் எனவும், இனி யாருக்கும் பொலிஸாருக்கு நேரடியாக பணம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


வாகன விதிமீறல் இடம்பெறும் இடத்திலேயே ஆன்லைனில் அபராதத்தை செலுத்த முடியும் எனவும், பணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் தகவல் உடனடியாக செலுத்துபவரின் கைப்பேசிக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


இந்த முழு செயல்முறைக்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்களே ஆகும் என்றும் அவர் கூறினார். 


லஞ்சம் கொடுப்பதும் பெறுவதும் குற்றம், அத்தகைய குற்றங்கள் கண்டறியப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.  


மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு...


இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான வானிலையால் டெங்கு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.


இந்த நிலையிலேயே, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உடனடியாக இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு நாட்டில் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், வைத்தியரிடம் சிகிச்சை பெற தாமதிக்க வேண்டாம் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. 



பரீட்சைக்கு அச்சமடைந்து மாணவி 


களுத்துறையில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.


களுத்துறை, துவா கோயில் வீதியை சேர்ந்த 16 வயது மாணவியே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த துயர சம்பவம் கடந்த இரண்டாம் திகதி அவரின் வீட்டில் நடந்துள்ளது.


பிரபல பாடசாலை மாணவியான அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எதிர்கொள்ள அச்ச நிலைமை காரணமாக விபரீத முடிவை எடுப்பதாக மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



சிறுவர்களிடையே அதிகரிப்பு!


சிறுவர்களிடையே இரத்த அழுத்தப் பாதிப்பு அதிகரித்து வருவது ஒரு கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது. 


'தி லான்செட்' (The Lancet) மருத்துவ இதழில் வெளியான ஆய்வின்படி, கடந்த இருபது ஆண்டுகளில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தம் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.


2000 ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்த இந்த பாதிப்பு, 2020 இல் 6 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 


உலகளாவிய அளவில் இது சிறுவர்களிடையே 3.40% லிருந்து 6.53% ஆகவும், சிறுமிகளிடையே 3.02% லிருந்து 5.82% ஆகவும் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "இந்த உயர்வு ஒரு எச்சரிக்கை மணியாகும். எனினும், முறையான பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் இதைக் கட்டுப்படுத்த முடியும் என்பது ஒரு நல்ல செய்தி," என்கிறார்.   


  இரத்த அழுத்தத்தின் வகைகள் 


  முதன்மை இரத்த அழுத்தம் 


இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் என்று எதுவும் கிடையாது. இதுவே சிறுவர்களிடையே காணப்படும் பொதுவான வகை.


  இரண்டாம் நிலை இரத்த அழுத்தம் 


இது சிறுநீரக நோய், இதய நோய், ஹோர்மோன் குறைபாடுகள் அல்லது சில மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாக ஏற்படுகிறது. 


சிறுவர்களிடம் காணப்படும் உயர் இரத்த அழுத்த அறிகுறிகள் தொடர்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 


அடிக்கடி ஏற்படும் தலைவலி, பார்வையில் குறைபாடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், முகம் சிவத்தல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, வலிப்பு அல்லது வாந்தி போன்றவை இதற்கான அறிகுறிகள் என கூறப்படுகிறது.



உயர்தரப் பரீட்சை தொடர்பா.......! 

No comments

Theme images by fpm. Powered by Blogger.