பாடசாலை விடுமுறை..... ..............!
பாடசாலை விடுமுறை..... ..............!
பாடசாலை விடுமுறை..... ..............!
கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவு
பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உந்துருளிகளை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி, பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
அதிக வலுக்கொண்ட உந்துருளிகளைப் பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அந்த வாகனங்களைக் கைப்பற்றி அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
உந்துருளிகள் என்பது ஒருவரது பயண வசதிக்காகவே தவிர, பிரதான வீதிகளில் பந்தயங்களில் ஈடுபடுவதற்கோ, பாதசாரிகளை ஆபத்தில் தள்ளுவதற்கோ அல்லது ஒழுக்கத்துடன் வாகனங்களைச் செலுத்துபவர்களுக்கு இடையூறு விளைவிப்பதற்கோ அல்ல.
குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ள இந்த கலாசாரம் மிகவும் பயங்கரமானது.
எனவே, அதிக வேகத்துடன், அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களைச் செலுத்துபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளோம்.
தற்போது 18 வயதுக்கும் குறைந்தவர்கள் கூட உந்துருளிகளை செலுத்துகின்றனர்.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிவேகமாகச் சென்று ஏற்பட்ட விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிக்கிரியை ஊர்வலத்திலும் பலர் தலைக்கவசம் இன்றி உந்துருளிகளில் ஆபத்தான முறையில் பயணித்தனர்.
இளைஞர்களின் இந்தப் போக்கு ஆரோக்கியமானது அல்ல. எனவே, சட்டத்தை மிகக் கடுமையாக நிலைநாட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டவிரோதமான அதிக வலுக்கொண்ட உந்துருளிகளை உடனடியாகக் கைப்பற்றி, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, அவற்றை அரசாங்க உடமையாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டிட்வா' புயலினால் உயிரிழந்தவர்கள்
'டிட்வா' புயலினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது .
(21/01/2026) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
சில சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் இந்த மாதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 2.4% ஆகக் காணப்பட்ட முதன்மை பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 2.9% ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் நவம்பர் மாதம் 3.6% ஆக இருந்த உணவு பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4.4% ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் 1.5% ஆகக் காணப்பட்ட உணவு அல்லாப் பணவீக்கம், டிசம்பர் மாதத்தில் 1.6% ஆக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
புதிய வாகனங்களை வாங்க குவியும் இலங்கையர்கள்...
நாட்டின் புதிய வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறையில் டிசம்பர் மாதத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் குறித்த சமீபத்திய கணக்கெடுப்பில், நவம்பரில் 43,810 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அந்த எண்ணிக்கை 48,525 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், அறிக்கைகளின் படி மொத்தப் பதிவுகளில் 93.9% குறைவான (1000cc) எஞ்சின் வலு அல்லது 100 கிலோ வோட்டுக்கு குறைவான மின்சார வாகனங்கள் ஆகும்.இந்த வாகனங்களை வாங்குவதற்கான நிதி வசதிகளைப் பெறுவதற்கான சதவீதம் கிட்டத்தட்ட 50% என்று அறிக்கை கூறுகிறது.
இதற்கமைய, மோட்டார் வாகன பதிவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், முந்தைய மாதத்தில் 3,691 ஆக இருந்த நிலையில், டிசம்பரில் 5,007 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில், நவம்பரில் 781 ஆக இருந்த மோட்டார் வாகன பதிவுகள் டிசம்பரில் 1,150 ஆக அதிகரித்துள்ளன. BYD பிரிவில் 408 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகிக்கின்றது.
Dolphin டால்பின் ரக வாகனங்களில் 263 மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அல்டோ 1 145 மோட்டார் வாகனங்களையும் பதிவு செய்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவான மாற்றம் . இதன்படி, BAW 283 இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.டொயோட்டா 191 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தையும் பதிவு செய்துள்ளது.
இதற்கு கூடுதலாக, பெரோடுவா 99 ஆக்சியா 66 மற்றும் பெஸ்ஸா 33 யூனிட்களை பதிவு செய்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.இதேபோல், வுலிங் 50 யூனிட்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கிடையில், பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சந்தையில், நவம்பரில் 2,910 இல் இருந்து டிசம்பரில் 3,857 ஆக வாகன பதிவுகள் அதிகரித்துள்ளன.
இவற்றில் பயன்படுத்தப்பட்ட வாகனப் பதிவுகளில் 96% சிறிய மோட்டார் வாகனங்கள் ஆகும். 95% ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். இந்த வாகனங்களுக்கான நிதி விகிதம் 52.8% ஆகும்.
இவற்றில் சுசுகி 1,446 வாகனங்களைப் பதிவு செய்து முன்னிலை வகித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை?
நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை பணியாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு, வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக தெரிவித்தே, தொழிற்சங்கங்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
அதன்படி, பொறியியலாளர் சங்கம், தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகளின் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கம், அலுவலக சேவை சங்கம், கூட்டு மின்சார சங்கம், அழைப்பு மைய இயக்குநர்கள் சங்கம் மற்றும் பாதுகாப்பு வலுவூட்டல் மன்றம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களே போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையை முற்றாக நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடுவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மின்சாரசபை சுதந்திர சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை ஒத்திவைக்குமாறு வலுசக்தி அமைச்சரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வானிலை முன்னறிவிப்பு...
=
23/01/2026 முதல், தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும் ...
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது. கிரீன்லாந்தை நாங்கள் பாதுகாத்து அதனை டென்மார்க்கிடம் வழங்கினோம். இது நாங்கள் செய்த முட்டாள்தனம். இப்போது கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை. கிரீன்லாந்துக்கு எதிராக படைபலத்தை பயன்படுத்த மாட்டேன்.
அமெரிக்க ஜனாதிபதிகள் கடந்த 2 நூற்றாண்டாக கிரீன்லாந்தை வாங்க முயன்று வருகின்றனர். பனியால் சூழப்பட்ட இந்த மாபெரும் நிலப்பரப்பை எங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். இது நேட்டோவுக்கான மிரட்டல் அல்ல. நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒன்றை யாராலும் மறுக்க முடியாது.
நாங்கள் நேட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக குறைந்த அளவில் தான் நேட்டோவிடம் இருந்து பலன் பெறுகிறோம். நான் பல ஆண்டுகளாக நேட்டோவை எதிர்க்கும் விமர்சகராக இருந்து வருகிறேன். ஆனாலும், வேறு எந்த ஜனாதிபதியையும் விட நான் நேட்டோவிற்கு அதிகமாக அள்ளிக் கொடுத்துள்ளேன் என தெரிவித்தார்.
பாடசாலை விடுமுறை..... ..............!

No comments