பாடசாலை மாணவர்களுக்கானகொடுப்பனவு....!
பாடசாலை மாணவர்களுக்கானகொடுப்பனவு....!
பாடசாலை மாணவர்களுக்கானகொடுப்பனவு....
டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட இடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களில் 72 சதவீதமானோருக்கு 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பொதுநிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.
டித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டித்வா புயல் தாக்கத்தாலும், மழையுடனான காலநிலையாலும் முழு நாடும் பாதிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் ஏதேனும் அனர்த்தத்தால் ஒருசில மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களே பாதிக்கப்படும். ஆனால் இம்முறை இத்தாக்கத்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டது.
டித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட நேரடியான பாதிப்புக்களால் தொலைத்தொடர்பு சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது. காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னர் தான் தொலைத்தொடர்பு சேவை கட்டம் கட்டமாக வழமைக்குத் திரும்பியது.
தொலைத்தொடர்பு சேவை வழமைக்குத் திரும்பியதன் பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதற்கமைய முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டது. இந்த கொடுப்பனவு தற்போது அநேகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பேரிடரால் பாதிக்கப்பட்ட 1,95154 பாடசாலை மாணவர்களில் 1,41 382 பேருக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சகலருக்கு நிவாரணம் வழங்கப்படும். இந்த அனர்த்தத்துக்கு முழு நாடும் முகங்கொடுத்துள்ளதால் தகவல் கோரலில் சற்று தாமதம் காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்ட சகல தரப்பினருக்கும் நிவாரணம் வழங்கப்படும்“ என தெரிவித்தார்.
சுற்றுலா வலயம் சுற்றுலாப் பயணிகளுக்காக மீள் திறப்பு.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான நக்கிள்ஸ் வனப்பகுதியில் உள்ள ரிவர்ஸ்டன் சுற்றுலா வலயம் , டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, 01/02/2026 உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியால் ரத்தொட்ட மற்றும் லக்கலையிலிருந்து பெரிதும் சேதமடைந்த வீதிகள் இரு மாதங்களுக்குள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் தற்போது, இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன, இதேவேளை பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, இதனால் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவை மேற்கொள்ள முடியும்.
இதேவேளை பார்வையாளர்கள் பொறுப்புடன் வாகனங்களை செலுத்தவும் , உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விலை அதிகரிப்பு...
உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வழமையாக ஒரு கிலோ 300 தொடக்கம் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், தற்போது இஞ்சி ஒரு கிலோ 1500 தொடக்கம் 2000 ரூபாய் வரையான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டித்வா புயலினால் இஞ்சிச் செய்கைகள் அழிவடைந்ததன் காரணமாக, இந்நாட்களில் உள்ளூர் சந்தையில் பச்சை இஞ்சிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கானகொடுப்பனவு....!

No comments